Friday, 19 April 2013

”நல்ல நண்பனை இழந்துவிட்டேன்” - M.S.விஸ்வனாதன் உருக்கம்!


பிரபல இசையமைப்பாளர் T.K.ராமமூர்த்தி சமீபத்தில் காலமானார். இசைப்பிரியிர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசை ஜாம்பாவான்கள் M.S.விஸ்வனாதனும், T.K.ராமமூர்த்தியும்.


‘பணம்’ படத்தில் துவங்கி பல படங்களில் ஒன்றாக இசையமைத்த இவர்கள் 1965-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்துடன் சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தார்கள். அதன்பிறகு மறுபடியும் 1995-ல் 'எங்கிருந்தோ வந்தான்' படத்தில் இணைந்து ஒன்றாக இசையமைத்து வந்தார்கள்.

 தனது உற்ற நண்பரான ராமமூர்த்தியின் மறைவு குறித்து ஆங்கில இணையதள பத்திரிக்கைக்கு பேட்டியளித்த M.S.விஸ்வனாதன் “என் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை பகிர்ந்துகொண்ட உற்ற நண்பனை இழந்துவிட்டேன். 

60-களில் நாங்கள் பிரிந்தாலும் மனதளவில் நண்பர்களாகவே இருந்து வந்தோம். பெரும்பாலும் வயலின் மட்டுமே இசைத்து வந்தாலும் ராமமூர்த்தி சிறந்த இசையமைப்பாளர்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts