நடிகர், நடிகைகளுக்கு பிறந்தநாள் என்றாலே மொத்த திரையுலகமும் குதூகலமடைந்துவிடும். அதிலும் த்ரிஷா பிறந்தநாள்(மே-4) என்றால் சொல்லவா வேண்டும்.
கடந்த வாரம் வரை த்ரிஷா சுவிட்சர்லாந்தில் ’என்றேன்றும் புன்னகை’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அவரது பிறந்தநாள் எங்கு கொண்டாடப்படும் என்றே தெரியாமல் இருந்தது.
இப்போது தனது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடப்போவதாக த்ரிஷா கூறியிருக்கிறார். இது பற்றி த்ரிஷா “ சுட்டெரிக்கும் சூரியன், நடுங்க வைக்கும் குளிர், மழை, பனி என அனைத்தையும் தாங்கிய பிறகு சுவிட்சர்லாந்தில் என்றேன்றும் புன்னகை ஷூட்டிங் முடிந்துவிட்டது.
அப்பறம் முக்கியமா இது என் ’பொறாந்தநாள் வாரம்’. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆரம்பித்துவிட்டன” என்று டுவிட்டரில் கூறியிருக்கிறார்.
துள்ளி குதித்து சென்னைக்கு கிளம்பி வரும் த்ரிஷாவிற்கு சென்னையில் என்னென்ன பரிசுப் பொருட்கள் காத்துக்கொண்டிருக்கின்றன என்று பார்ப்போம்.
த்ரிஷாவின் சென்ற பிறந்தநாளுக்கு அவரது ரசிகர் ஒருவர் சச்சின் கையெழுத்து போட்ட பேட் ஒன்றை த்ரிஷாவின் பிறந்தநாள் பரிசாக அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment