நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் நடித்த ’கடல்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியிருந்தது.
முதல் படத்தில் ஏமாற்றம் அடைந்தாலும், அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி தற்போது ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக்.
‘வை ராஜா வை’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை ‘3’ திரைப்படத்தை இயக்கியவரும், ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ திரைப்படமும் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியதால் இந்த படத்தை வெற்றிப்படமாக இயக்க உறுதிகொண்டுள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஜெய், பூர்ணிமா உள்ளிட்ட பல நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

No comments:
Post a Comment