1983 ல் வெளிவந்த ஹிம்மத்வாலா படத்தை மீண்டும் ரீமேக் செய்தார்கள் இந்தியில். இதில் ஸ்ரீதேவி நடித்த கேரக்டரில் நடித்தவர் நம்ம ஊரு தமன்னா.
கலரில் மட்டும் ஸ்ரீதேவியாக இருக்கும் தமன்னா, நடிப்பிலும் அவரை விஞ்சுவாரா என்ற கேள்விக்கெல்லாம் அப்படத்தின் வெற்றியே பதிலாக இருந்தது. படத்தின் இயக்குனர் சஜித்கான் சொன்ன ஒரு சில வார்த்தைகள்தான் தமன்னாவின் முகத்தை இன்னும் சிவப்பாக்கியது. இது நாணத்தால் வந்த ரெட்டுங்க!
தமன்னாதான் பாலிவுட்டின் அடுத்த ஸ்ரீதேவி என்று கூறிவிட்டார் அவர். அவ்வளவுதான்... தமன்னாவை சுற்றி சுற்றி வந்து கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டது மீடியா. வேறு வழியில்லாமல் பதிலும் சொல்லிவிட்டார் தமன்னா. இந்த பதிலை கேட்டு சஜித்கான் முகம் சிவக்காமலிருந்தது தமன்னா செய்த புண்ணியம். இது சரியான முகஸ்துதி. இப்படியெல்லாம் என்னை பாராட்டினால் எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் தமன்னா.
ஸ்ரீதேவியுடைய நடிப்புக்கும் நடனத்திற்கும் முன்னால் என்னால் போட்டி போடவே முடியாது. டைரக்டர் சொன்னதைதான் நான் செஞ்சேன். இந்த பாராட்டெல்லாம் அவருக்குதான் போகணும் என்று கூறிவிட்டார் தமன்னா.
இந்தியில் இவ்வளவு நல்ல பெயர் இருக்கும் போது அங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானே? எதற்காக மனசு அலைபாயணும்? என்ற கேள்வியை சாதாரண ரசிகர்களே கூட கேட்கிற அளவுக்கு மீடியாவுக்கு பதில் சொல்லி வருகிறார் தமன்னா.
தமிழ்ல மீண்டும் நடிக்கணும்னு ஆசைப்படுறேன். அஜீத், விக்ரம், சிம்புவுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். முதல் இருவர் ஓ.கே. சிம்பு எதற்கு? செலவில்லாமல் விளம்பரம் கிடைக்குமே, அதுக்காக இருக்குமோ?

No comments:
Post a Comment