அஜித் நடித்துக்கொண்டிருக்கும் ’வலை’(அப்படித்தான் சொல்றாங்க) திரைப்படத்தின் படப்பிடிப்பும், விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தலைவா திரைப்படத்தின் படப்பிடிப்பும் முன்பையில் நடந்தது.
இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் அருகருகே நடந்ததால் வழக்கம் போல தமிழ்த்திரையுலகின் இரண்டு மாஸ் நட்சத்திரங்களும் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டு பேசிக்கொண்டார்களாம். குடும்பம், திரைத்துறை என பல விஷயங்களை குறுகிய காலத்தில் பேசி முடித்த அவர்கள், தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களைப் பற்றியும் பேசிக்கொண்டார்களாம்.
விஜய் நடித்துக்கொண்டிருக்கும் தலைவா திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் அவரே பாடியிருக்கும் பாடலை அஜித்துக்கு போட்டுக் காண்பித்திருக்கிறார். அந்த பாடலைக் கேட்ட அஜித் “இந்த பாடல் தான் 2013-ன் சிறந்த பாடலாக இருக்கும்” என்று கூறினாராம்.
மனதில் பட்டதை அப்படியே சொல்லும் அஜித்தின் குணத்தை அறிந்த விஜய், அஜித்தின் இந்த பாராட்டுதலால் நெகிழ்ந்துபோயிருக்கிறாராம். அஜித், விஜய் இருவரின் திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் முடிவடைந்திருப்பதால் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
No comments:
Post a Comment