இயக்குனர் சேரன் இயக்கத்தில் பத்து ஆண்டுகள் கழித்து வெளிவரும் திரைப்படம் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை. எதிர்பாராத தோல்விகளால்(சில படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தாலும்) சில ஆண்டுகள் அமைதியாக இருந்து ஒரு பலமான கதையை உருவாக்கிக்கொண்டிருந்த சேரன் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தின் மூலமாக ஒரு இயக்குனராக திரையுலகத்திற்குள் மறுபடியும் பிரவேசிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஜே.கே எனும் நண்பன் திரைப்படத்தின் FIRST LOOK வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய சேரன் “இன்றைய சூழ்நிலையில் மக்கள் ஆயிரம் பிரச்சனைகளை தலைக்குள் திணித்துக்கொண்டு எப்போதும் மனதில் ஒருவித அழுத்தத்துடன் இருக்கிறார்கள். ரசிகர்கள் பிரச்சனையை மறந்து சில மணிநேரங்கள் ரிலாக்ஸாக இருக்கவைக்கவே படம் எடுக்கிறோம்.
அப்படி அவர்களுக்கு ஏற்றதுபோல் படம் எடுக்கும் போது அதில் ஒரு நல்ல விஷயத்தையும் சேர்த்து கொடுக்கிறோம். அந்த நல்ல விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்லவே நான் முயற்சி செய்திருக்கிறேன். நாம் வெற்றிபெறும் போது பலர் நம்மை சூழ்ந்துகொள்வதும், நமது வெற்றி தாமதமாகும் போது நம்மை தள்ளிவைப்பதும் தான் இயல்பு.
நான் பல நடிகர்களிடம் கால்ஷீட் கேட்டபோது, அவர்கள் பிஸியாகவும் இருந்தார்கள். அதேசமயம் அவர்களுக்கு என் படத்தில் நடிக்க உடன்பாடும் இல்லை. சேரன் இயக்கத்தில் செண்டிமெண்டாக வசனம் பேசி நடிப்பதெல்லாம் ஆகாது. நாம் எப்போதும் யூத்தாக தான் நடிக்க வேண்டும் என்று கதை கேட்காமலேயே நிராகரித்துவிட்டனர்” என்று தனது திரைப்படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை புலம்பித் தீர்த்துவிட்டார்.

No comments:
Post a Comment