Monday, 22 April 2013

சிங்கள பெண்ணிற்கு வாய்ப்பு? பிரபுதேவா மீது திரும்புது கோபம்!



எவனாவது இலங்கை பக்கம் போனீங்க... மனுசனா இருக்க மாட்டோம், அவ்ளோதான்' என்று இங்கிருக்கும் இன உணர்வுள்ள கட்சிகளும் அமைப்புகளும்

எச்சரித்துக் கொண்டிருந்தாலும், 'இவ்ளோ பிரச்சனையிருக்கும்னு எனக்கு தெரியாது, அதனால வந்துட்டோம். மன்னிச்சுருங்க, ப்ளீஸ்...' என்று வழிந்து கொண்டே வருத்தப்படும் பாடகர்களும், பாடகிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை அப்படியே கொழும்பு ஏர்போர்ட்டிலிருந்து 'பேக்கப்' செய்து திரும்பி வரவழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள் இங்கிருக்கும் தோழர்கள்.

நீயே அங்க போவாதேங்குறேன், இதுல அங்கிருந்து ஒருத்திய இங்க கொண்டாருவியா, அதுவும் ஒரு தமிழ் ஹீரோவா இருந்துகிட்டு? இப்படி பிரபுதேவா மீது பாய தயாராகிக் கொண்டிருக்கின்றன இந்த அமைப்புகள்.

என்ன செய்தாராம் பிரபுதேவா? தற்போது 'ராமைய்யா வொஸ்தாவயா' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இவர். இதில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் வரும் இன்னொரு ஹீரோயின் கேரக்டருக்கு ஒரு நாட்டுத் தக்காளியை தேடிக் கொண்டிருந்தவருக்கு கண்ணில் மாட்டினார் இலங்கையை சேர்ந்த நடிகை ஜாகுலின் பெர்ணான்டஸ். இவர் ஒரு சிங்களச்சி.

வந்த ரெண்டாம் நாளிலிருந்தே 'பிரபுதேவா ஒரு ஜீனியஸ்' என்று பேட்டியளித்து வருகிறார் ஜாகுலின். அவரு ஜீனியஸ்சோ, போனிக்சோ, இந்த செய்தி கசிந்த நாளிலிருந்தே அவரது இமேஜை நார் நாறாக கிழித்து ஓனிக்ஸ் தொட்டியில் வீசிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே.

தென்னாட்டின் மைக்கேல் ஜாக்சன் ஏர்போர்ட்டுக்கு வர்றப்போ இருக்கு கச்சேரி!...


No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts