Tuesday, 7 May 2013

துருவ நட்சத்திரத்தில் நட்சத்திர பட்டாளம்!


கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவநட்சத்திரம் திரைப்பட படப்பிடிப்பு படபூஜையுடன் விமர்சையாக துவங்கிவிட்டது. படபூஜையில் பார்த்திபன் கலந்துகொண்டு படக்குழுவில் அவரும் இருப்பதை உறுதி செய்துள்ளார்.


கௌதம் மேனனின் நடவடிக்கையையும், துருவநட்சத்திரம் திரைப்படத்தின் ஒரே ஒரு போஸ்டரையும் பார்த்த கோடம்பாக்கத்துக்கே தலை சுத்துகிறதாம். நடிகர் பார்த்திபனைத் தொடர்ந்து, நடிகை சிம்ரனையும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கும் கௌதம் மேனன், இப்போது சமீரா ரெட்டியிடம் பேசிவருகிறாராம்.

வாரணம் ஆயிரம் போல இரண்டு ஹீரோயின் என மனதைத் தேற்றிக்கொண்டிருக்க தமிழ் சினிமாவால் கவனிக்காமல் விடப்பட்டு, எதிர்நீச்சல் திரைப்படத்தில் செதுக்கிய சிலை போல் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள ப்ரியா ஆன்ந்துடனும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் போஸ்டரில் பேஸ்மண்ட் என்பவர் 12-வது நபரை தேடிக்கொண்டிருப்பதால், திரைப்படத்தில் 12 நட்சத்திரங்கள் சேர்க்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. துருவநட்சத்திரம் திரைப்படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த கௌதம் மேனன் “ துருவநட்சத்திரம் உலகதரத்தில் உருவாகும், பெரிய பட்ஜட் ஆக்‌ஷன் படம். உலகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் சண்டைக் காட்சிக்ளை படமாக்கவிருக்கிறோம்” என்று கூறியுள்ளார். 

துருவநட்சத்திரம் திரைப்படத்தின் கலை இயக்குனர் ராஜீவன் கொல்கத்தாவில் மிகப்பெரிய அரசு கட்டடங்களுக்கான செட் அமைத்துக்கொண்டிருக்கிறாராம்.(பாம் போட்டு வெடிக்க வைக்க கஷ்டப்பட்டு கட்றாங்க)

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts