ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து மூன்றாம்கட்ட படப்பிடிப்பை துவங்க ‘ஐ படக்குழு தயாராக இருந்தாலும் புரொடக்ஷன் தரப்பின் மந்தன் நிலை படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டதாம்.
ஷங்கர் படத்தில் பிரம்மாண்டத்திற்கு குறைவு இருக்காது என்றாலும் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுப்பதால், மொத்த பணத்தையும் எடுத்துவிட முடியுமா? என்ற சந்தேகம் ஐ திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பிற்கு ஏற்பட்டுவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்.
ஆனாலும ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஷங்கர், விக்ர, மற்றும் படத்தின் கதை ஆகியவற்றின் மேல் உள்ள நம்பிக்கையில் பணத்தை தயார் செய்துகொண்டிருக்கிறாராம். ஜூலை 1-ஆம் தேதி துவங்கவிருக்கும் மூன்றாம் மற்றும் கடைசிகட்ட படப்பிடிப்பிற்காக விக்ரம் 15 கிலோவை குறைத்துவிட்டாராம்.
படப்பிடிப்பின் துரிதத்தைக் கண்டு படம் பொங்கலன்று ரிலீஸ் செய்யப்படலாம் என்று பேசிக்கொள்கின்றனர் ‘ஐ’ படக்குழுவினர்.
No comments:
Post a Comment