Tuesday, 7 May 2013

படப்பிடிப்பை தொடரும் விஷ்ணுவர்தன்! டைட்டிலை சொல்லும் ஆர்யா?


அஜித் - விஷ்ணுவர்தன் இணைந்துள்ள அஜித்தின் 53-வது திரைப்படம் வழக்கம்போல அஜித்தின் மாஸ் ஓபனிங்கை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது. ”42 நொடி டிரெய்லருக்கு ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அஜித்தின் நடிப்பிற்கும், விஷுவலுக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளன.


ரசிகர்களை மேலும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் கடினமான இடங்களில் சில காட்சிகள் எடுக்கவிருக்கிறோம்” என டுவீட்டிருக்கிறார். தற்போது மஹாபலேஷ்வரில் இருக்கும் படக்குழு தொடர்ந்து ஜெய்சல்மர், லே, லடாக் ஆகிய பகுதிகளில் சில முக்கிய காட்சிகளை படமாக்கவிருக்கிறதாம். (படத்தை எப்ப சார் ரிலீஸ் பண்ணுவீங்க)

அஜித்தின் 53-வது திரைப்படத்தைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட, திரைப்படத்தின் பெயரை அறிய மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஜித் திரைப்படத்தின் டிரெய்லரிலும் பெயர் சொல்லவில்லை. ’படத்துக்கு இன்னும் பெயரே வெக்கல’ என்று அஜித் சொல்லும் காட்சி அஜித்தே கொடுத்த ஐடியாவாம். 

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் பெயரையும், ரிலீஸ் தேதியையும் பற்றி பேசிய ஆர்யா ‘மே 17-ஆம் தேதி அஜித்தின் 53-வது திரைப்படத்தின் பெயர் வெளியிடப்படும்” என்று கூறியிருக்கிறார்.

படத்தின் பெயரை டிரெய்லரில் குறிப்பிடாமல், சில நாட்கள் கழித்து ரிலீஸ் செய்வதற்கு ரசிகர்கள் 42 நொடிகள் கொண்ட டிரெய்லருக்கு யூடியூபில் அளித்த வரவேற்பு(1,614,878 ஹிட்ஸ்) தான் காரணமாம். வலைதளத்தில் வெளியான டிரெய்லருக்கு வரவேற்பு கொடுத்த மாதிரி வலைதளத்தில் படம் வெளியானால், படத்துக்கு வரவேற்பு கொடுக்காம தியேட்டருக்கு போய் படம் பார்ப்போம்.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts