நடிகை கார்த்திகாவின் இளைய மகள் துளசியை ரசிகர்கள் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் வெள்ளந்தியான சிறு பெண்ணாக பார்த்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த படத்தில் அவ்வாறு பார்க்க முடியாது.
ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடிக்கும் யான் திரைப்படத்தில் துளசி வெள்ளந்தியான அப்பாவிப் பெண்ணாகவோ, காதல், டூயட், கவர்ச்சிக் காட்சிகளுக்காக மட்டும் வரும் சாதாரண ஹீரோயினாகவோ நடிக்கவில்லையாம். முக்கியக் கதாபாத்திரமான வில்லி கேரக்டரில் நடிக்கிறாராம்.
அறிமுகமாகி இரண்டாவது படத்துக்கே வில்லி கேரட்க்டரா என புருவம் சுளிக்கவே வேண்டாம் என்கிறது படக்குழு. ஏனென்றால் அந்த அளவிற்கு துளசி கதாபாத்திரத்தை கனமாக திரைக்கதையுடன் பிணைத்திருக்கிறாராம் இயக்குனர். தனது நடிப்புத் திறமையை வெளிக்கொனரவும் இந்த வாய்ப்பு உதவிகரமாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் நடித்துவருகிறார் துளசி.

No comments:
Post a Comment