நடிகர் சிம்பு உருவாக்கிக்கொண்டிருக்கும் ‘லவ் ஆந்தம்’ ஆல்பத்தின் பணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது துவங்கியுள்ளது. மீதமுள்ள பணிகளை முடிக்க இந்த ஆல்பத்தில் சிம்புவுடன் இணைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற பாப் பாடகர் ’ஏகான்(AKON)' சமீபத்தில் சென்னை வந்தார்.
ஏகான், சிம்புவுடன் இணைந்து ‘பியார் பிரேம காதல்’ என்று துவங்கும் வரிகளுக்கு நடனமாடுகிறார். இந்த நடனக்காட்சிக்கு காஸ்டியூமாக வேஷ்டி சட்டையை சிம்பு கொடுக்க, “முதலில் இதை நீ போட்டுக்காட்டு, நன்றாக இருந்தால் நான் போட்டுக்கொள்கிறேன்” என்று கூறிய ஏகான் சிம்புவை வேஷ்டி சட்டையில் பார்த்ததும் பிடித்துப்போக மிகவும் மகிழ்ச்சியுடன் வேஷ்டி சட்டை அணிந்துகொண்டாராம்.
மேலும் ஏகான் ஆடவேண்டியது குத்து டான்ஸ் என்பதால், சில குத்து டான்ஸ் காட்சிகளைப் போட்டு பார்த்துவிட்டு பின்பு நடனக் கலைஞர் பிருந்தா சொல்லிக்கொடுத்தபடி சிறப்பாக ஆடியிருக்கிறார். ஏகானுக்கு சிம்பு செய்து கொடுத்த ஸ்பெஷல் பிரியாணி அவருக்கு மிகவும் பிடித்துப்போனது மட்டுமின்றி, இந்திய சினிமா பற்றி அறியவும் அவர் மிகவும் ஆவலாக இருக்கிறாராம்.
ஷூட்டிங் முடிந்த பிறகு இருக்கும் ஓய்வு நேரங்களில் சிம்புவுடன் இணைந்து ஏகான் சென்னையின் முக்கிய பகுதிகளை கண்டு ரசித்து வருகிறார்.
No comments:
Post a Comment