நளன் குமாரசாமி இயக்கத்தில், விஜய சேதுபதி நடித்து வெளியாகியுள்ள சூது கவ்வும், பலதரப்பட்ட ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளது. ரசிகர்களின் பாராட்டு மட்டுமல்லாமல் கமல்ஹாசன் பாராட்டையும் பெற்றுள்ளது சூது கவ்வும்.
சமீபத்தில் சூது கவ்வும் திரைப்படத்தைப் பார்த்து ரசித்த கமல்ஹாசன், படக்குழுவை பாராட்ட அவரடுஹ் வீட்டிற்கு அழைத்திருந்தார். நடிகர் விஜயசேதுபதியைத் தவிர சூதுகவ்வும் யூனிட் முழுவதும் சென்று கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றனர்.
விஜய சேதுபதி வேண்டுமென்றே கமல்ஹாசன் வீட்டிற்கு செல்லவில்லை என எங்கிருந்தோ யாரோ திரியை கிள்ளிவிட அது தானாக பற்றிக்கொண்டுவிட்டது கோடம்பாக்கத்தில். விஜய சேதுபதி கமல்ஹாசன் அழைப்பு விடுத்த தினத்தன்று அவரது நண்பனுடன் விரைவில் இணையவிருக்கும் ‘வசந்தகுமாரன்’ திரைப்படம் சம்மந்தமான பணியில் இருந்தாராம்.
பண்ணையாரும் பத்மினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மேலும் ஒரு சீனு ராமசாமி திரைப்படம் என வரிசையாக படங்களை கையில் வைத்துக்கொண்டிருக்கும் விஜய சேதுபதிக்கு வேறு வேலைகளை திரும்பிப் பார்க்க கூட நேரமில்லையாம்.
No comments:
Post a Comment