Sunday, 28 April 2013

”பாக்யராஜ் மூலமாக பாடம் கற்றுக்கொண்டேன்” - இளையராஜா!



இயக்குனர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் சித்திரையில் நிலாச்சோறு படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜா மற்றும் பாக்யராஜ், சிவகுமார், சத்யராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய இளையராஜா “  சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று போற்றப்படும் பாக்யராஜை எனக்கு புதிய வார்ப்புகள் படத்தின் போது தான் தெரியும். புதிய வார்ப்புகள் திரைப்படத்திற்கு நான் இசையமைத்த போது பாரதிராஜா என்னிடம் பாக்யராஜை அறிமுகம் செய்துவைத்து, இவர் தான் இத்திரைப்படத்தின் ஹீரோ என்று கூறினார்.

நான் உடனேயே ‘நான் இசையமைக்க வேண்டாமா? இவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு நான் எப்படி இசையமைப்பது' என்று நேரடியாகவே சொல்லிவிட்டேன். ஆனால் அது எவ்வளவு தவறு என்பது பிறகு தான் புரிந்தது. புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஒப்பற்ற கலைஞன் ஒருவன் கிடைத்திருக்கிறான்.

நான் அன்று முடிவு செய்தேன் இனி யாரையும் பார்த்த மாத்திரத்தில் எந்த முடிவிற்கும் வரக்கூடாது என்று. எந்த மனிதனுக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை ஒளிந்திருக்கும் என்று பாக்யராஜ் மூலமாக கற்றுக்கொண்டேன்” என்று கூறினார். சித்திரையில் நிலாச்சோறு திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ’தெய்வத்திருமகள்’ நிலா நடித்திருக்கிறார்.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts