ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கோச்சடையான் படத்தின் ஃபோட்டோக்களும், தகவல்களும் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கின்றன.
கோச்சடையான் படத்தில் ரஜினி தனது குரலிலேயே பாடியிருக்கும் பாடல் எதிரிகள் இல்லை என்று துவங்குகிறதாம். வைரமுத்து எழுதிய இந்த பாடல் ரஜினியின் குரலிலும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் முதன் முதலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒலிக்கப் போகிறது.
உலகத்திலுள்ள அனைத்து திரையுலகத்திற்கும் முக்கிய திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவில் கோச்சடையான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால், ரஜினியே கேன்ஸ் விரைகிறாராம்.

No comments:
Post a Comment