Saturday, 4 May 2013

மீண்டும் சூர்யாவுடன் நடிக்கும் சிம்ரன்!



பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் பூஜையுடன் வெகு விமர்சையாக துவங்கிவிட்டது. 

பூஜையை துவங்கிய கையோடு துருவநட்சத்திரம் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களிடையே திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துவிட்டது படக்குழு. மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிப்பதாக இருக்க, இப்பொழுது சிம்ரனையும் தேர்வு செய்துள்ளதாம் படக்குழு. 

கௌதம் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த சிம்ரன், துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் நடிக்கிறாராம். சிம்ரனுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்புதல் பெற்று அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாம். இன்னும் பேனாவை எடுத்து கையெழுத்து போடவேண்டியது மட்டும் தான் பாக்கி என்கிறது கோடம்பாக்கம்.


No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts