Saturday, 4 May 2013

விராட் கோலி மாதிரி கணவர் வேண்டும் - அஞ்சலி!


அந்த பொண்ணுக்கு இந்த நிலைமையா?’ என்று அதிர்ச்சியடையாத ரசிகர்களே கிடையாது எனலாம் அஞ்சலி விஷயத்தில். அவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி மறுபடியும் திரையுலகில் பிரவேசிக்கத் துவங்கியிருக்கும் அஞ்சலி இப்போது ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறார்.


வாயிலிருந்து எதையாவது பிடுங்கி விடுவார்கள் என்பதற்காக ரொம்பவே பத்திரிக்கைகளிடமிருந்து ஒதுங்கியும் இருக்கக்கூடாது என்று அவ்வப்போது பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும் அஞ்சலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

பேட்டியில் பேசிய அஞ்சலி “எனக்கு வரும் கணவர் விராட் கோலி மாதிரி இருக்க வேண்டும். எப்போதும் துருதுருவென்று எதையாவது செய்துகொண்டு, தீர்க்கமான முடிவுகள் எடுக்கக் கூடிய உறுதியுடன் இருக்க வேண்டும். ஷேவிங் செய்து மொழு மொழுவென்று இல்லாமல், ட்ரிம் செய்துகொண்டு சொரசொரப்பான தாடியுடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

மேலும் விராட் கோலியைப் பார்க்கும் போதெல்லாம் இளையராஜாவின் காதல் பாட்டு தான் முணுமுணுக்கிறாராம். பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேண்டும என்று அடம்பிடிக்காமல் இருந்தால் சரி.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts