கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சில நாட்களுக்கு முன்பு தான் முடிந்தது.
ஒவ்வொரு படத்திற்கும் இடையே குறிப்பிட்ட இடைவெளி விடும் கமல் இந்தமுறை, விஸ்வரூபம் முடிந்ததும் விஸ்வருபம் 2 வேலைகளை துவங்கி அதற்குள் முடித்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சர்யபட்டுகொண்டிருக்கும் சமயத்தில் தனது அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார் கமல். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை கமல்ஹாசன் இயக்கி நடிக்கவிருக்கிறாராம்.
இதுபற்றி பேட்டியொன்றில் பேசிய லிங்குசாமி “ விஸ்வரூபம் 2 முடிந்ததும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படம் அக்டோபரில் துவங்குகிறது. எங்கள் தயாரிப்பில் ஒரு படம் இயக்கவேண்டும் என்று கேட்டதும், கமல் எங்களை அழைத்து மூன்று கதைகள் சொன்னார். அந்த மூன்று சிறந்த கதைகளில் ஒரு கதையை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்.
சினிமாவிற்காக கமல் தன்னை அற்பணித்துக்கொள்வதைப் பார்த்து நான் பூரித்துவிட்டேன். மேலும் கமலை வைத்து படமெடுப்பதில் பெருமையும் அடைகிறேன். தமிழ் சினிமாவின் மெகா பட்ஜெட் படங்களில் இந்த படமும் ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

No comments:
Post a Comment