இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்ஸிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிங்கம் 2.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிவுற்றதால் அடுத்தகட்டமாக ரிலீஸுக்கான வேலைகளில் இறங்கியுள்ளது சிங்கம் 2 யூனிட்.
சிங்கம் 2 வருகிற ஜூன் மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாகிறதாம். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சிங்கம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதால் இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் ஹன்ஸிகா, அனுஷ்கா என தமிழ்த்திரையுலகின் இரண்டு பிரபல நடிகைகளை கமர்ஷியல் திரைப்படத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

No comments:
Post a Comment