Friday 31 May 2013

யுவனுக்காக அஜித் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு குலுமனாலியில் நடந்தது. கிட்டத்தட்ட முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டநிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும், இசை சம்மந்தப்பட்ட வேலைகளும் துரிதமாக நடந்துவருகின்றன.


விஷ்ணுவர்தன் திரைப்படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா, சமீபத்தில் மரியான் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக ’கடல் ராசா நான்’ என்ற பாடலை பாடிக்கொடுத்தார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் ‘யுவன் படத்தில் உங்களை பாட அழைத்தால் நீங்கள் பாடுவீர்களா?’ என்ற கேள்வி வீசப்பட்டது. இதற்கு நேரடியாக பதிலளிக்காமல் “அது நடக்கும்போது பார்க்கலாம்” என்று கூறிவிட்டார். 

இப்பொழுது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் விஷ்ணுவர்தன் -அஜித் திரைப்படத்தில் ஒரு மெலொடி பாடல் பாடுமாறு ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டிருக்கிறாராம். ஏ.ஆர்.ரஹ்மானும் சம்மந்தம் தெரிவித்துவிட்டதாக கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள்(அவங்களே டுவிட்டர்ல சொல்லுவாங்க) வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts