Showing posts with label Movie Review. Show all posts
Showing posts with label Movie Review. Show all posts

Friday, 26 July 2013

Pattathu Yaanai Movie Review | Kashayam With Bosskey

Pattathu Yaanai is an 2013 Tamil film directed by Boopathy Pandian and produced by Michael Rayappan. The film features Vishal Krishna and Aishwarya Arjun in the lead roles, while Santhanam plays another pivotal role. The film has music composed by Thaman, and is going to be released in July 26 2013 alongside with its Telugu dubbed version Dheeradu.

Sunday, 21 July 2013

Thirai Vimarsanam 21-07-2013 | Singam 2 | Sun Tv Thirai Vimarsanam | Sun Tv Sunday Program | Singam 2 Movie Review

Thirai Vimarsanam - 21-07-2013, Thirai Vimarsanam, Sun Tv Thirai Vimarsanam, Sun Tv Shows

Any work of art requires review and analysis. This becomes even more important for films. Films - a perennial source of interest, finds a voice in this program - literally and figuratively. A review of a recently released film with necessary clippings from the film is shown on the smallscreen. The audience are also found to voice their opinion, concerning the film. Watch Sun Tv Thirai Vimarsanam At ellameytamil.com

Saturday, 20 July 2013

Mariyaan Movie Review | Kashayam With Bosskey

Mariyaan Review: Acting wise, no little or lengthy words to explain the magnificence of Dhanush, he can go up with heads high of the fact that, he is no more an ordinary actor down the lane and more is left in that lean body. Parvati as Panimalar is sure to create a crater size impact on Indian Cinema, her eyes twinkle and do most of the talking, but that doesn't stop the actress, her chemistry with Dhanush is one of the best in Tamil Cinema. Rest of the cast Appukuty, Uma Riaz, Jagan, African cast all live up to their expectations as well.

Sunday, 7 July 2013

Thirai Vimarsanam 07-07-2013 | Theeya Velai Seiyyanum Kumaru | Sun Tv Thirai Vimarsanam | Sun Tv Sunday Program | Theeya Velai Seiyyanum Kumaru Movie Review

Thirai Vimarsanam - 07-07-2013, Thirai Vimarsanam, Sun Tv Thirai Vimarsanam, Sun Tv Shows

Any work of art requires review and analysis. This becomes even more important for films. Films - a perennial source of interest, finds a voice in this program - literally and figuratively. A review of a recently released film with necessary clippings from the film is shown on the smallscreen. The audience are also found to voice their opinion, concerning the film. Watch Sun Tv Thirai Vimarsanam At ellameytamil.com

Saturday, 6 July 2013

சிங்கம் - விமர்சனம்! || சிங்கம் 2 - சூர்யாவின் கர்ஜனை! சரவெடித் திரைக்கதை!


விஜயகாந்த் செய்த வானத்தில் பறக்கும் சாகசங்களில் தொடங்கி தம்பி கார்த்தி அலெக்ஸ் பாண்டியன் படத்தில் ஓடும் ரயிலை குறுக்குவழியில் சென்று பிடித்துவிடும் அதிபயங்கரமான அட்டகாசங்கள் வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் செய்கிறார் சூர்யா. சூர்யாவின் ஸ்டண்டுகளைப் பார்த்து ஆப்பரிக்கா போலிசே அசந்துபோறாங்கன்னா பார்த்துக்கோங்க மக்களே!


தொண்டைக்குள்ள ஏதோ மைக் வச்சுத் தைத்தமாதிரி உச்சஸ்தாயில் வசனங்களைப் பேசி ரணகளப்படுத்துகிறார் சூர்யா (ஸ்ட்ரிட்டான போலிசாம்). ஆகாயத்தில் பறப்பது, மாடியில் இருந்து குதிப்பது, ஒரே அடியில் ஒன்பது பேரை சாய்ப்பது என கர்ஜிக்கும் சிங்கமாகவே வலம் வருகிறார் சூர்யா. இடை இடையே குத்துப்பாட்டும் கலர் கலர் டான்சும் கூட இருக்குதுங்கோவ்!

போலிஸ் வேலையில் இருந்து விலகிவிட்ட சூர்யா தூத்துக்குடி பள்ளியில் என்.சி.சி மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இருந்தாலும் முதலமைச்சரின் உத்தரவுப்படி தூத்துக்குடியில் கப்பல் வழியே நடக்கும் ஆயுதக்கடத்தல் பற்றி ஆராய்ந்து வருகிறார். அதே இடத்தில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதும் தெரியவருகிறது. 

இது பற்றி போலிசுக்கு தகவல் சொல்ல... டிப்பார்ட்மெண்டில் பல கருப்பு ஆடுகள் அந்த கடத்தல் கும்பலுக்கு கைக்கூலிகளாக இருப்பதும் அம்பலமாகிறது. எரிமலையாய் இடிமழையாய் வெகுண்டெழும் சூர்யா, டிப்பார்ட்மெண்டில் இருக்கும் யாரையும் நம்பாமல், தூத்துக்குடி டி.எஸ்.பி-யாக தானே சார்ஜ் எடுக்கிறார்.


அடியாள் வேலை செய்கிறவர் தொடங்கி, இந்த கடத்தல் பிஸ்னசின் ஆணிவேரை  கண்டுப்பிடிக்கிறார். டேனி என்ற இராட்சதனை தென் ஆப்ரிக்காவிற்கே சென்று அதே சாகசங்களை நடத்தி அவனைப் பிடித்துவந்து தூத்துக்குடி சிறையில் அடைக்கிறார் சிங்கம் சூர்யா. 

சரவெடி மாதிரி சரசரவென நகர்கிறது திரைக்கதை. திறமையான திரைக்கதை இருந்தால் மட்டும் போதும், எந்த ’டப்பா’ கதையைக் கொண்ட படத்தையும் ஹிட்டாக்கி விடலாம் என்பது ஹரி சிங்கம் படத்தில் நிரூபித்திருக்கிறார். தேவையான அளவு மசாலா சேர்ப்பது மாதிரி அனுஷ்காவையும் ஹன்சிகாவையும் அளவுடன் பயன்படுத்தி இருக்கிறார் ஹரி. 


சந்தானமும் நல்லாவே சிரிக்க வைக்கிறார். விவேக்கும் படத்தில் இருக்கிறார். ஆனால் அவர் காமெடி செய்வதற்கெல்லாம் திரைக்கதையில் டைம் இல்லை.ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், ரவுடிக்கும்பலை சூரையாடும் காட்சியில் சூர்யா பிண்ணிட்டார். ஒரு மாஸ் ஹீரோவுக்கான  அத்தனை தகுதியும் அவருக்கு இருப்பதை சிங்கம் 2 மீண்டும் உறுதி செய்கிறது.

சூர்யாவிடம் சந்தானம், குதிரையை போட்டோவுல பார்த்திருப்பீங்க, டி.வியில பார்த்திருப்பீங்க, ஆனா சுடிதார்போட்டு பார்த்திருக்கீங்களா என்று சொல்லி அனுஷ்காவைக் காட்டுவதும், தொடர்ந்து... ஓரமா கூட்டிட்டு போய் ஓங்கி ஒரு கிஸ் அடிச்சா ஒன்ற மாசத்துக்கு தூக்கம் வராது... என்று சிங்கம் ஸ்டைலில் சொல்வது செம காமெடி!


கனவிலும் சாத்தியமாகாத இது போன்ற விஷயங்களை தமிழ்சினிமாவில் பலர் இதற்கு முன்பாக செய்துகாட்டி இருக்கிறார்கள். தென் ஆப்ரிக்காவில் சூர்யாவின் ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து சிரிப்பு வந்தாலும், ஜனங்க ரசிக்கிறாங்களே... அதுக்கு மேல நாம என்ன சொல்லமுடியும்! 

சிங்கம் 2 - சூர்யாவின் கர்ஜனை! சரவெடித் திரைக்கதை!

Friday, 5 July 2013

Singam 2 Movie Review | BY Prashanth

Review about recently released tamil movie singam2 which has suriya, hanshika, anuskha, santhanam, vivek and many others in the lead role. singam2 songs and BGM composed by DSP , editing for singam2 done by VT vijayan, singam2 is directed by hari.

Singam 2 Movie Review | Kashayam With Bosskey

Singam II is an upcoming Tamil film directed by Hari, starring Suriya in the title role with Anushka Shetty, Hansika Motwani, Vivek and Santhanam in supporting roles. The film is a sequel to the successful 2010 film Singam.It is tentatively scheduled to release on July 5, 2013 along with a Telugu dubbed version titled Singam.

Monday, 1 July 2013

Thiraivimarsanam - Annakodiyum Kodiveeranum - Raj Tv

Annakodi is a 2013 Tamil film directed and written by Bharathiraja.[1] It features Lakshman Narayan, Karthika Nair and Manoj Bharathiraja in the lead roles. The film has music by G. V. Prakash Kumar.[2] The film was earlier titled Annakodiyum Kodiveeranum.Annakodi is a 2013 Tamil film directed and written by Bharathiraja.[1] It features Lakshman Narayan, Karthika Nair and Manoj Bharathiraja in the lead roles. The film has music by G. V. Prakash Kumar.[2] The film was earlier titled Annakodiyum Kodiveeranum.

Friday, 28 June 2013

Ambikapathy Movie Review | Kashayam With Bosskey

We are used to feel good romancers with added dose of bromance thrown in regularly by the tinsel town filmmakers.. 'Ambikapathy' is an unsuspecting welcome surprise which turns from poetic to politics taking the viewers on a journey which witnesses adolescent, obsession, jealously, friendship, ignorance, innocence, faith, love, loss, sacrifice, anger, revenge, guilt all one after the another and hold its 'heart' right at the centre for its recognition as a wonderfully told different love story of Bollywood..

The Story..

Himanshu Sharma as the writer does a marvelous job here.. the story is set on the holy ghats of Ganges Banaras where Kundan (Dhanush) sees Joya (Sonam Kapoor) much before his adolescent and falls in love with her head over heels... Circumstances force Zoya to go to Delhi for further education. A wannabe politician (Abhay Deol) steals her heart... but be aware this is not a run of the mill triangle and just when you expect that now the feel good regular bollywood romancer will take charge.. the writer shocks you with a twist which can be anything from a political conspiracy to a joke on the so called paper revolutionaries (social media) revolutionaries who jump in the protest without understanding the root cause of the issue.. and the writer manages this difficult task of twining the poetry of love in Banaras to the politics of the so called 'waken' up young souls in the capital Delhi in this new found 'touchy' adage of love which is also blended with attitude..

Sunday, 23 June 2013

Thirai Vimarsanam 23-06-2013 | Masani | Sun Tv Thirai Vimarsanam | Sun Tv Sunday Program | Masani Movie Review

Thirai Vimarsanam - 23-06-2013, Thirai Vimarsanam, Sun Tv Thirai Vimarsanam, Sun Tv Shows

Any work of art requires review and analysis. This becomes even more important for films. Films - a perennial source of interest, finds a voice in this program - literally and figuratively. A review of a recently released film with necessary clippings from the film is shown on the smallscreen. The audience are also found to voice their opinion, concerning the film. Watch Sun Tv Thirai Vimarsanam At ellameytamil.com

Sunday, 16 June 2013

Thirai Vimarsanam 16-06-2013 | Kutty Puli | Sun Tv Thirai Vimarsanam | Sun Tv Sunday Program | Kutty Puli Movie Review

Thirai Vimarsanam - 16-06-2013, Thirai Vimarsanam, Sun tv Thirai Vimarsanam, Sun Tv Shows




Any work of art requires review and analysis. This becomes even more important for films. Films - a perennial source of interest, finds a voice in this program - literally and figuratively. A review of a recently released film with necessary clippings from the film is shown on the smallscreen. The audience are also found to voice their opinion, concerning the film. Watch Sun Tv Thirai Vimarsanam At ellameytamil.com

Friday, 14 June 2013

Theeya Velai Seiyyanum Kumaru Movie Review | Kashayam With Bosskey

Theeya Velai Seiyyanum Kumaru is a Tamil romantic comedy film directed by Sundar C. and produced by Kushboo Sundar starring Siddharth, Hansika Motwani and Ganesh Venkatraman, with Santhanam as a comedian. The film is simultaneously shot in Telugu language as Something Something, in which Brahmanandam replaces Santhanam for the Telugu version.

தில்லு முல்லு - விமர்சனம்!


இந்தியில் வெளிவந்த ’கோல்மால்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு. பாலச்சந்தர் ரீமேக் செய்த தில்லு முல்லு திரைப்படத்தை மறுபடியும் தமிழிலேயே ரீமேக் செய்திருக்கின்றார்கள்.பெரிய நட்சத்திரமாக இருந்த ரஜினி நடித்த தில்லு முல்லு திரைப்படத்தை முழுநீள காமெடி திரைப்படமாக எடுத்திருக்கின்றனர். 


எம்.எஸ்.வி, யுவன் ஷங்கர் ராஜா திரையில் ஒன்றாக தோன்றி தில்லு முல்லு டைட்டில் சாங் பாடுவது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சீட்டில் நிமிர்ந்து உட்காரவைக்கிறது. ’அகில உலக சூப்பர்ஸ்டார்’ சிவா என டைட்டில் கார்டு போடுவதிலிருந்து கடைசியில் வணக்கம் சொல்லி எண்ட் கார்டு போடுவது வரை படம் பார்ப்பவர்கள் சிரிப்பது உறுதி. 

தில்லு முல்லு திரைப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை வைத்துக்கொண்டு படம் சிரிப்பு வெடிகளுடன் நகர்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட தில்லு முல்லு திரைப்படத்தை தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு செதுக்கி இருக்கிறார்கள். 

ஃபுட்பால் போட்டியின் போது தேங்காய் சீனிவசனிடம் ரஜினி சிக்குவது மாதிரி, ஐ.பி.எல் போட்டியின் பார்ட்டியில் சிவா கூத்தடிப்பது செல்ஃபோன் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டு சிவா பிரகாஷ் ராஜிடம் சிக்குகிறார். ரஜினி மீசை இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக வருவது போல, காண்டேக்ட் லென்ஸ் உதவியுடன் பூனைக்கண் சிவா வருகிறார்.


80-களில் வாழ்ந்த பெண்ணுக்கு சங்கீதம் சொல்லித்தந்தால் இருபத்தியோராம் நூற்றாண்டில் கராத்தே சொல்லிக் கொடுப்போம் என இஷா டல்வார் கராத்தேவையும் காமெடியாக சொல்லிக்கொடுக்கிறார் சிவா. 

ஒவ்வொரு காட்சியிலும் சிவா பேசும் வசனங்கள் போகிற போக்கில் ஒரு காமெடி. சூரியும் சிவாவுக்கு பக்கபலமாக காமெடியில் கலக்குகிறார். அந்த தில்லு முல்லுவில் கமல்ஹாசன் வருவது போல் இந்த தில்லு முல்லுவில் சந்தானம் வந்து கிளைமாக்ஸை காமெடிக் கொண்டாட்டமாக மாற்றுகிறார்.

ராகங்கள் பதினாறு ரீமிக்ஸ் பாடல் கேட்க நன்றாக இருந்தாலும், சிவாவின் காமெடி நடிப்புக்கு ரொமாண்டிக் பாடல் செட் ஆகவில்லை. எம்.எஸ்.வியின் மெட்டுக்கு யுவன் ஷங்கர் ராஜாவின் பாப் இசை வலு சேர்க்கிறது.


காமெடிக்காவே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர், நடிகைகளை செலக்ட் செய்திருக்கிறார்கள். இதில் இஷா டல்வார் மட்டும் எப்படியோ தவறி வந்து சேர்ந்துவிட்டார். லாஜிக் தவறுகளை கண்டுகொள்ளாமல், கே.பி-யின் தில்லு முல்லுவை மறந்துவிட்டு புதிய திரைப்படமாக பார்த்தால் தில்லு முல்லு(2013) கண்டிப்பாக ரசிக்கக்கூடிய எண்டர்டெயினர் திரைப்படம்.

தில்லு முல்லு - பழச மறந்தா புதுச ரசிக்கலாம்!

Sunday, 9 June 2013

Thirai Vimarsanam 09-06-2013 | Neram | Sun Tv Thirai Vimarsanam | Sun Tv Sunday Program | Neram Movie Review

Thirai Vimarsanam - 09-06-2013, Thirai Vimarsanam, Sun tv Thirai Vimarsanam, Sun Tv Shows
Any work of art requires review and analysis. This becomes even more important for films. Films - a perennial source of interest, finds a voice in this program - literally and figuratively. A review of a recently released film with necessary clippings from the film is shown on the smallscreen. The audience are also found to voice their opinion, concerning the film. Watch Sun Tv Thirai Vimarsanam At ellameytamil.com

Friday, 31 May 2013

சோக்காலி - விமர்சனம்! || சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!


படத்தின் டைட்டிலை வைத்தே கதை என்னவாக இருக்கும் என்பதை கணிக்க முடியும். பெண்களை கரெக்ட் பண்ணி பின்னர் கல்தா கொடுக்கும் ஒரு ப்ளே-பாயின் கதை தான் சோக்காலி.

டி.வி தொகுப்பாளராக இருக்கும் புதுமுக ஹீரோ சைதன்யா. இவருக்கு போன் பண்ணி பிடித்தபாடலை போடச்சொல்வதும், அந்த பாடலை அவருக்கே டெடிகேட் பண்ணுவதும் தான் தமிழ்நாட்டில் பாதி பெண்களின் வேலையாக படத்தில் காட்டுகிறார்கள். தனக்கு பெண் விசிரிகள் அதிகமாக இருப்பதால் அதை பல வழிகளில் தன் ஆசைகளை தீர்த்துக்கொள்ள நினைக்கிறார் ஹீரோ. 

அப்படி இவர் மேல் ஆசைப்படும் ஒரு இளம் பெண் தான் படத்தின் ஹீரோயின் சுவாசிகா. ஹீரோவின் மொபைல் நம்பரை தேடி பல பெண்கள் ஏங்கிக்கொண்டிருக்க. அந்த அபூர்வ நம்பர் ஹீரோயின் கைக்கு கிடைக்கிறது. ஹீரோயின் இருக்கும் இடத்தைத் தேடி ஹீரோ ஓடிவர. சுவாசிகாவை உண்மையாகவே காதலிப்பது போல ஏகப்பட்ட புருடா விடுகிறார் சைதன்யா.வழக்கமாக எல்லா பெண்களிடத்திலும் தன் வேலையை காட்டுவது போல, இங்கேயும் தன் லீலைகளை அரங்கேற்றிவிடுகிறார். பிறகென்ன... எல்லாம் முடிந்த பிறகு டாடா பை-பை தான்!

இது ஒருபுறம் இருக்க, சோனாவிடம் ஒரு அடிமையாய் கிடக்கிறார் ஹீரோ சைதன்யா. சோனாவுக்கு கொஞ்சம் தாகமெடுத்தால், அந்த தாகத்தை தணிக்க ஹீரோ உதவி செய்கிறார் என்றே சொல்லலாம். திடீரென ஒருநாள் ஹீரோவை ஆள்வைத்து அடிக்க சொல்கிறார் சோனா. என்னடா இதுன்னு? ஒரு கேள்வி வரும்போது, சோனாவின் தங்கையை ஹீரோ நாசம் செய்திருப்பது ஃப்ளாஷ் பேக்காக வந்து போகிறது. ஆக பாதிக்கபட்ட பெண்களெல்லாம் ப்ளே-பாய் ஹீரோவை ரவுண்டுகட்ட... என்ன ஆகிறது என்பதே க்ளைமாக்ஸ்.

சோனாவின் காட்சிகளில் கவர்ச்சி தலைதெரிக்க ஆடுவதால், அந்த காட்சிகளை சென்சார் கத்தரித்துவிட்டது என்பது தான் பலருக்கும் ஏமாற்றம். இருந்தாலும் கிடைக்கிற கேப்பில் சிக்ஸர் அடிக்கிறார் சோனா. ஒரு பெரிய நடிகை என பில்டப் கொடுத்து பாபிலோனாவை காட்டுவது நல்ல காமெடி. நான் குள்ளமான ஆண்கள் முதல் உயரமான ஆண்கள் வரை எல்லாவித ஆண்களையும் பார்த்திருக்கேன் என்று ஹீரோவைப் பார்த்து பாபிலோனா சொல்கிற வசனம் ஜாலி டைம்ஸ்! சிரிக்க வைக்க சொன்னால், கஞ்சா கருப்பு கடுப்பேற்றுகிறார்... ஷ்ஷ்ஷபா... முடியல! 

பாடல்கள் எல்லாமே சுமார் ரகம் தான். சில காட்சிகள் ஓவர் செண்டிமெண்ட் காட்டி நம் பொருமையை ரொம்பவே சோதிக்கிறது. அப்பாவித்தனமாக ஆண்களை நம்பி ஏமாறவேண்டாம் என்கிற ஒரு நல்ல மெசேஜ்  சொல்ல முயன்ற இயக்குனர் ஏ.சரணாவை பாராட்டலாம்.

சோக்காலி - மெசேஜ் சொல்லும் முயற்சி!

Thursday, 30 May 2013

குட்டிப்புலி - விமர்சனம் || குட்டிப்புலி - வன்முறை வெறியாட்டத்தின் ரத்தச் சிதறல்!


மீண்டும் கத்தியும் ரத்தமுமாக உலாவரும் ஒரு மதுரை படம். மதுரை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கிற கதை. மதுரை  அரசியல்வாதியின் அடியாளாக இருக்கும் ஒரு முக்கிய புள்ளி எப்படி வெட்டிக் கொல்லப்படுகிறார் என்பதை கதை அம்சமாக கொண்டிருக்கும் இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தை மதுரை ரசிகர்கள் தலையில் தூக்கிக்கொண்டாடப் போவது உறுதி!


ஊருக்குள் ‘சண்டியர்’ தனம் செய்துகொண்டிருக்கும் மாஸ் ஹீரோவாக குட்டிப்புலி (சசிக்குமார்). ஒரு ஊர்ப்பிரச்சனையில், தன் சமூகத்துக்காகவும் தன் இன மானத்திற்காகவும் தன் உயிரையே கொடுத்தவர் தான் குட்டிப்புலியின் அப்பா. சிறுவயதிலேயே தன் அப்பாவை இழந்த குட்டிப்புலி தன் தாயிடம் அளவுகடந்த பாசத்தில் வளர்கிறார். அப்பாவைப் போல இவர் ஊர்ப்பிரச்சனைக்குப் போகக்கூடாது என்பது அம்மா சரண்யாவின் விருப்பம். 

ஆனால் குட்டிப்புலியோ தன் அப்பாவைப்போல ஊருக்காக பல பிரச்சனைகளில் ஈடுபட்டு பல வில்லன்களை சம்பாதித்துக்கொள்கிறார். ’கல்யாணம் செய்துகொண்டால் என் அம்மாவை போல என் மனைவியின் நிலையும் ஆகிவிடும்...’ என்று சொல்லி மாப்பிள்ளை பார்க்க வருகிறவர்களிடம் சில களேபரங்களை நடத்தி தப்பித்துக்கொண்டே வருகிறார். 

அம்மாவுக்கோ குட்டிப்புலிக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கவேண்டும் என்பதுதான் லட்சியம். அதற்காக போகாத கோவிலில்ல, வேண்டாத தெய்வமில்ல. இந்த நிலையில் அந்த தெருவுக்கு புதிதாய் குடிவருகிறார் பாரதி (லட்சுமி மேனன்). அந்த தெரு வயசுப்பசங்க அத்தனை பேரும் அவருக்கு ரூட் விடுகிறார்கள், ஆனால் குட்டிப்புலியின் ஹீரோயிசங்கள் லட்சுமி மேனனை மயக்குகிறது. லட்சுமி மேனனிடம் லவ் லெட்டர் கொடுக்க தைரியம் இல்லாத அந்த வயசுப்பசங்க, குட்டிப்புலியை கலாய்க்கும் நோக்கத்தோடு, அந்த லெட்டரை குட்டிப்புலியிடம் கொடுத்து கொடுக்கச் சொல்கிறார்கள். இந்த கலாட்டா ஒருபுறம் இருக்க... 

பாரதியின் கண்முன்பாகவே குட்டிப்புலியை திடீரென ஒரு கும்பல் ரவுண்டுகட்டி சரமாரியாக வெட்டிசாய்க்கிறது. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில் தன் நகைகளை விற்று பணம் கொடுக்கிறார் பாரதி. அப்டி இப்டின்னு ஒரு கட்டத்தில் காதல் வருகிறது. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவந்த குட்டிப்புலியின் கொள்கையெல்லாம் காற்றில் பஞ்சாய்ப் பறக்கிறது! காதல் வந்த பிறகு அவர் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை... 

அம்மாவின் ஆசையும் நிறைவேறியாச்சு... குட்டிப்புலிக்கு காதலும் கைகூடியாச்சு... பிரச்சனை தானா தேடி வருதா, இல்ல பிரச்சனையை தேடி இவங்க போறாங்களா என்பதை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு ஒரு பிரச்சனை வருது. இதுவரை தமிழ்சினிமாவில் இல்லாத ஒரு க்ளைமாக்ஸ்! பெண்கள் கண்களை இறுக மூடிக்கொள்வார்கள் என்பது நிச்சயம். படம் முழுக்க ரத்தத்தை தெளித்துவிட்ட இயக்குனர், க்ளைமாக்ஸ் காட்சியில் ரத்தத்தை அண்டாவில் அள்ளி ஊற்றுகிறார். 

படம் முழுக்க ஒரு மாஸ் ஹீரோவாகவே வலம் வருகிறார் சசிக்குமார். ’நான் வயித்துல பொறந்தவன் இல்லடா... வைராக்கியத்துக்குப் பொறந்தவண்டா...’ என்று பஞ்ச் டையலாக்குகளை அள்ளி வீசுகிறார் ( ’ஏ சூப்பர்பா... இதுக்கு முன்னாடி நீ இப்படி பேசி நான் பாத்ததேயில்ல போ...’ என்ற பருத்திவீரன் டையலாக் நினைவுக்கு வந்து போகிறது ). 

சிலம்பு சுற்றுகிற காட்சியில் முடிந்தளவு முயற்சித்திருக்கிறார் சசிக்குமார், இருந்தாலும் அவருக்கு முன்பு ஒரு சின்ன பையன் சிலம்பு சுற்றுவது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. காதல் வந்ததும் ஜீன்ஸ், டி-ஷர்ட், ஷூஸ், கூலர்ஸ் என கலக்குறாரு சசிக்குமார். ’அத்த மக, அக்கா மக...’ பாட்டுல சசிக்குமார் போடும் குத்தாட்டத்துக்கு மதுரை மட்டுமில்ல டோட்டல் தமிழ்நாடே அதிரப்போகுது. மாஸ் ஹீரோவாக வலம் வந்தாலும் ஆகாயத்தில் பறப்பது, ஒரே அடியில் பத்துபேரை சாய்ப்பது போன்ற சில்லறைத்தனமான ஹீரோயிசங்களை செய்யாமல், கதையின் எதார்த்தத்தைக் கவனத்தில் வைத்து உஷாராக செயல்பட்டிருக்கிறார். 

படத்தின் காமெடிக்கு உதவுகிறார் பாலா. ’படிக்கிற கதையிலும் பார்க்குற சினிமாவிலும் இந்த பொண்ணுக சல்லிப்பயலுங்களத்தான் லவ் பண்றாளுங்க’ன்னு ரொம்பவும் மெனக்கெடாமல் போகிற போக்கில் காமெடி கமெண்ட் அடிப்பது சுவாரஸ்யம். முத்தம் கொடுத்ததால் உதட்டில் ரத்த காயத்தோடு வரும் சசிக்குமாரைப் பார்த்து ’காதலைக் கூட இவன் வன்முறையாத்தான் ஹேண்டில் பண்றான்’ என்று சொல்வது செம டைமிங்.

தன் மகனுக்கு ஜீன்ஸ் பேண்ட் எடுக்க கடைக்கு போகும் சரண்யா, அங்கே ஷாருக்கானின் போஸ்டரைக் காட்டி ‘என் மகன் அந்த பையன மாதிரி இருப்பான்’ன்னு சொல்வதும், அதுக்கு பக்கத்தில் இருக்கும் ரமேஷ் பிரபா ‘அட போக்கா... நம்ம புள்ள எவ்வளவு முகலட்சணமா இருக்கான்’ன்னு காமெடி வெடி போடுவது சூப்பர். 

அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யாவுக்கு நடிப்பு சொல்லியாத்தரணும், வழக்கம் போலவே விளாசுகிறார். லட்சுமி மேனனின் உயரத்துக்கு ஈடுகொடுக்க சசிக்குமாரே தள்ளாடுகிறார். நம்ம ஊர்க்கார பொண்ணு மாதிரியே அம்சமான முகம். நடிப்புக்கு அதிக அளவு ஸ்கோப் இல்லையென்றாலும் கொடுத்த வேலையை சரியாகவே செய்திருக்கிறார். 

மதுரைக்கு ஏற்ற வில்லனை நச்சுன்னு செலக்ட் பண்ணியிருக்காங்க. ராஜசிம்மன் மிரட்டும் விழிகளோடு வில்லன் கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறார். அரசியல் பேசும் ஒரு சிறுவனை கழுத்தில் குத்திக் கொல்கிற காட்சி அதிர வைத்தாலும் இப்போதிருக்கிற அரசியல் சூழலையும் அதன் மேல் இருக்கும் பயத்தையும் அதிகரிக்கிறது என்றே சொல்லலாம். 

இசை ஜிப்ரான் என்று டைட்டிலில் போடுகிறார்கள். அவர் கடமைக்கு அவரும் ஒரு ஐந்து பாடல்களை கொடுத்திருக்கிறார். ஆனால் படம் முழுக்க வலம் வருகிறது இளையராஜாவின் இசை ராஜாங்கம். சசிக்குமார்-லட்சுமிமேனன் காதல் காட்சிகளுக்கு இளையராஜாவின் ’பொன் ஓவியம்’ முழு பாடலையும் அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்கள். 

குட்டிப்புலி கலக்‌ஷனில் கல்லா கட்டப்போகும் ஒரு வெற்றிப்படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இன்னும் சில காட்சிகளை கத்தரித்து இருந்தால் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கலாம். எதார்த்தமான கதையையும் கமர்ஷியலான ஹீரோயிசங்களையும் கலந்துகட்டி படையல் வைத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் முத்தையா. கமர்ஷியல் களத்தில் கலெக்‌ஷனுக்கு குறிவைத்து பாய்ந்து வருகிறது இந்த குட்டிப்புலி. 


குட்டிப்புலி - வன்முறை வெறியாட்டத்தின் ரத்தச் சிதறல்!

Kutti Puli Movie Review | BY Prashanth

Review about recently released tamil movie kuttipuli, the movie has sasikumar, lakskmi menon, saranya ponvannan and many others in the lead role. songs and BGM composed by Gibran and the movie is directed by muthiah.Review about recently released tamil movie kuttipuli, the movie has sasikumar, lakskmi menon, saranya ponvannan and many others in the lead role. songs and BGM composed by Gibran and the movie is directed by muthiah.

Kutti Puli Movie Review | Kashayam With Bosskey

Sasikumar’s role is quite nostalgic as we have seen him many a time portray the angry lad who spares no hair when it comes to injustice. Well then again this is another story with a lot of mother-son sentiment niched into. The film is set in and around the vibrant towns of Sriveliputur and Rajapalayam has Sasikumar who plays Kuttipuli an honest son of a father who gave up his life for avenging a girl’s abuse, and the son takes up his Dad’s legacy and continues doing that. Saranya is a heartfelt mother who wants her son to stay out of all this ruckus and lead a serene life. But it’s easier said than done when it comes to Kuttipuli, who is also affectionately called as “Puli”.

Sunday, 12 May 2013

நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ - விமர்சனம்


ஒரு கேடுகெட்ட அரசியல்வாதிக்கு தன் மகனே ஆப்பு வைக்கும் அதிரடிப் படம் தான் அமைதிப்படை. நாகராஜசோழன் எம்.ஏ எம்.எல்.ஏ. (அமைதிப்படை-2) படத்திலும் அதே கதையமைப்பு தான். அரசியலைப்பற்றி அதேவிதமான சரவெடி வசனங்களை அள்ளிவீசி இருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன்.

வாரிசு அரசியல், அரசியல் கொலைகள், உட்கட்சி விவகாரம், கட்சி தாவுதல், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது, கட்சித் தலைமைக்கே ஆப்பு வைப்பது, என எல்லா விஷயங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது.

ஒரு மலைப்பகுதியை வெள்ளைக்கார வியாபாரிகளிடம் விற்பதற்கு பேரம்பேசுகிறார் முதலமைச்சர். அந்த மலைவாழ் மக்களின் வலிகளையும், போராட்டத்தையும் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அமைதிப்படை படத்தில் வந்த நாகராஜசோழன் கேரக்டர் இதிலும் தொடர்கிறது. 

சிறையில் இருக்கும் நாகரஜாசோழனை கட்சித்தலைமை பகைத்துக்கொள்ள, முதலமைச்சரின் ஊழல் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று போலீசை மிரட்டுகிறார் நாகராஜசோழன். சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சித்தலைமையை மிரட்டி துணைமுதல்வர் பதவியில் அமர்கிறார் நாகராஜசோழன். பிறகு... வழக்கமான அலப்பறைகள் தொடர்கிறது. 

தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான புள்ளியாக இருக்கும் நாகராஜசோழன் தன் மகனை ஒரு இந்திய அரசியல்வாதியாக்க கனவுகாண்கிறார். ஆனால், அவரது மகனோ ஒரு ஏழை பெண்ணை காதல் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்துகிறார். வெள்ளைகாரன் தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க அவனுக்கு ஒரு காட்டுப்பகுதியை கொடுக்க நாகராஜழோழன் முடிவெடுக்கிறார். அதில் ஒரு பெரிய அமௌண்டை கொள்ளையடிக்கலாம் என்பது அவரின் கணக்கு. ஆனால், சில நேர்மையான அதிகாரிகள் அதற்கு சம்மதிக்காததால், அவர்களை தீர்த்துக்கட்ட, பிரச்சனை பெருசாகிறது. 



இதற்குள் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைபேசி தன் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டு, தன்னை முதலமைச்சராக்கும் படி கட்சித்தலைமைக்குச் செக் வைக்கிறார் நாகராஜசோழன். பிறகென்ன மலைவாழ் மக்களின் போராட்டங்கள் பலனளிக்காமல் அவர்கள் போலீசால் சிறைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை வழிநடத்திய சீமான் போராட்டத்தைக் கைவிடவேண்டிய சூழல் வருகிறது. 

ஆடிய ஆட்டங்களெல்லாம் அடங்கிவிட, தன் சொந்த மகனே நாகராஜசோழனுக்கு சூன்யம் வைக்கிறார். இதற்கிடையில நாகராஜசோழன் என்கிற அம்மாவாசயும் மணிமாறன் என்கிற மணியனும் அடிக்கிற லொள்ளு இருக்கே... அதே எனர்ஜி - அதே டைமிங்! பிண்ணிட்டாங்களே...!

சீரியசான விஷயங்களை காமெடியோடு போறபோக்கில் அடித்துவிடுவது மணிவண்ணனுக்கே உரிய ஸ்டைல். சி.எம் முதல் பி.எம் வரை ஒருத்தர கூட விட்டுவைக்காம, சும்மா... கலாய்ச்சுட்டாங்களே! 



தன் வில்லத்தனமான நடிப்புக்கு வேறுயாரும் நிகரில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சத்யராஜ். மணிவண்ணனும் அதே குசும்போட இருக்கிறார். படத்தில் சில பிரம்மாண்ட காட்சிகள் இருந்தாலும், இவங்க இருவரும் லொள்ளு செய்கிற காட்சிகள் தான் அசத்தலாக இருக்கிறது. சீமான் அரசியல் மேடைகளில் பேசுகிற அதே உணர்ச்சியுடன் படத்திலும் பேசி நடித்திருக்கிறார். 

படத்தில் மலைவாழ் மக்களின் வலிகளை நாம் புரிந்துகொண்டாலும், அதைக் காட்சிப்படுத்திய வித்தில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருக்க முடியும். காட்சிகள் துண்டு துண்டாக இருப்பது படத்தின் மைனல். ஆனால் மேக்கிங்கில் இளைய இயக்குனர்களோடு போட்டி போட்டிருக்கிறார். 

டி.ஷங்கரின் தரமான ஒளிப்பதிவு பாராட்டுக்குறியது. ஜேம்ஸ் வசந்தனின் இசை சுமாரானது என்றே சொல்ல முடியும். பின்னணி இசையை கொஞ்சம் ஜாக்கிரத்தையாகவே கையாண்டிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. 

அமைதிப்படை முதல் பாகத்தை மிஞ்ச முடியாது என்றாலும், அந்தப்படத்தைப் பார்க்காதவர்களும் இந்த நாகராஜசோழனை பார்த்து ரசிக்க முடியும் என்பது நிச்சயம். 

சரவெடி வசனங்களில் சில...

சத்யராஜ் : இந்த தேர்தல்ல என்ன இலவசமா கொடுக்கலாம்?

மணிவண்ணன் : மிக்சி கொடுத்தாச்சுங்ண்ணா... கிரண்டர் கொடுத்தாச்சுங்ண்ணா... டி.வி கொடுத்தாச்சுங்ண்ணா... ஆனா, ஜனங்க பாவம் கரண்டு இல்லாமதாங்ண்ணா கஷ்ட்டப்படுறாங்க. அதனால் வீட்டுக்கு ஒரு ஜனரேட்டர் இலவசமா கொடுக்கலாம்.

----------------

சத்யராஜ் : மணியா... இந்தா... அவன சுட்டுத்தள்ளு
மணிவண்ணன் : அட, எனக்கு சுடத்தெரியாங்கண்ணா...
சத்யராஜ் : நீ எப்ப இதெல்லாம் பழகுறது?
மணிவண்ணன் : கைநடுக்கதுல உங்கள சுட்டாலும் சுட்டுடுவேன்
சத்யராஜ் : நீ செஞ்சாலும் செய்வ. துப்பாக்கிய குடு. 

----------------

சத்யராஜ் : என்னய்யா நடக்குது
மத்திய அமைச்சர் : அண்ணா, என் கையில எதுவும் இல்ல. சட்டத்த மீறி என்னால எதுவும் செய்ய முடியாது
சத்யராஜ் : அமைச்சரே, உங்கள நான் ஜெயிக்க வச்சதே சட்டத்த மீறித்தான். மறந்துட்டீங்களா

----------------

எதிர்கட்சித்தலைவர் : என் கிட்ட 17 எம்.எல்.ஏ இருக்குறாங்க தலைவரே. அதுவும் போன தேர்தல்ல உங்ககூட கூட்டணிவச்சு ஜெய்யிச்சதுதான்
சத்யராஜ் : அத வச்சுக்கிட்டு தானே சட்டசபையில ’ஏய்’ அப்படின்னு சவுண்டு கொடுக்குற 

----------------

சீமான் : மரமெல்லாம் வெட்டியாச்சுன்னா, மலை எங்க இருக்கும். மழை வந்து மண்ணெல்லாம் போய் வெறும் பாற தான் இருக்கும்
ஜெகன் : அப்போ பாற தான் மிஞ்சுமா
சீமான் : அதத்தான் வெட்டி வித்துடறாங்களே, கல்குவாரி கேள்விப்பட்டதில்ல
ஜெகன் : அப்போ, வெறும் தர தான் மிஞ்சுமா
சீமான் : அதையும் தான் ஃப்ளாட் போட்டு விட்துடறாங்களே

இன்னும் படத்தில் எவ்வளவோ இருக்கு...!

Thirai Vimarsanam 12-05-2013 | Naan Rajavaga Pogiren | Sun Tv Thirai Vimarsanam | Sun Tv Sunday Program | Naan Rajavaga Pogiren Review

Thirai Vimarsanam - 12-05-2013, Thirai Vimarsanam, Sun tv Thirai Vimarsanam, Sun Tv Shows
Any work of art requires review and analysis. This becomes even more important for films. Films - a perennial source of interest, finds a voice in this program - literally and figuratively. A review of a recently released film with necessary clippings from the film is shown on the smallscreen. The audience are also found to voice their opinion, concerning the film. Watch Sun Tv Thirai Vimarsanam At ellameytamil.com

Blog Archive