விண்ணில் பறக்கும் சாகசங்கள், கடல்நீருக்கடியில் சண்டை என ஆக்ஷன் காட்சிகளை வெளிநாடுகளில் முடித்துக்கொண்டு தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் கமல்ஹாசன் சமீபத்தில் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.
இந்த முதல் போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு அலைகளை ஏற்படுத்திவிட, விஸ்வரூபம் 2 திரைப்படம் குறித்து விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன் “ நான் புகழுக்காக படம் எடுக்கவில்லை, ரசிகர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக படம் எடுக்கிறேன்.
எனவே தான் இடைவெளி ஏதும் விடாமல் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தையும் உடனே துவங்கிவிட்டேன். இது கமல்ஹாசனின் திமிர் அல்ல நம்பிக்கை. என் முதல் படத்தை பார்க்காமலேயே உண்டான பிரச்சனைகளால் பல தடைகள் ஏற்பட்டன. இந்து-முஸ்லீம் நண்பர்களுக்கிடையே உள்ள ஆழமான நட்பை பிரதிபலிக்கும் வகையில் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
விஸ்வரூபம் முதல் பாகத்திற்கு முன்பு நடந்தது, அதன்பிறகு நடப்பது என இரண்டையும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் காட்டுவதோடு ரொமாண்டிக், எமோஷனல் காட்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம்.


No comments:
Post a Comment