தென்னிந்திய கூட்டுத் தயாரிப்பாளர் சங்கமான பெப்சியில் இருந்து விலகி, தனியாக செயல்பட உள்ளதாக, சின்னத் திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்து உள்ளார்.
தென்னிந்திய சின்னத்திரை, பெரியத்திரை என்று அனைத்து திரை தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு சங்கம் பெப்சி. இதில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வேலை நிறுத்த அறிவிப்பு என்று ஏற்படுவதால் மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் சின்னத்திரை கலைஞர்களும், தயாரிப்பளர்களும் மிகவும் கஷ்டத்துக்கும், நஷ்டத்துக்கும் ஆளாக நேரிடுகிறது என்று ராதிகா தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற காரணங்களைத் தவிர்ப்பதற்காகவே, சினத்திரை தயாரிப்பாளர் சங்கம் தனியாக பிரிந்து சென்று, தங்ககளுக்கு என்று ஒரு அமைப்பை உருவாக்கி கொள்ள விரும்புகிறது என்றும், அதற்கான செயல்களில் தற்போது இறங்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ள அவர், இனி பெப்ஸியுடன் சின்னத்திரை தயாரிப்பாளர்களுக்கு எந்தவித தொடர்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ராதிகா சரத்குமார் பல வருடங்களாக ராடான் என்கிற நிறுவனத்தின் மூலம் பல சின்னத்திரை தொடர்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
1.jpg)
No comments:
Post a Comment