Wednesday, 29 May 2013

அஜித்-விஜய் படங்களுக்கு நீதிபதி கண்டனம்!


ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்குள் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் எதிர்கொள்ளும் தடைகள் ஏராளம்.

சிறு சிறு தடைகள் பலவாறு ஏற்பட்டாலும் யார் மனதும் புண்பட்டு சமூக அமைதி குலைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தில் தீர விசாரிக்கப்பட்டே திரைப்படங்கள் நிபந்தனைகளுடன் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

இந்த சிக்கலில் சமீபத்தில் சிக்கியது ’மடிசார் மாமி’ என்கிற படம் தான். மடிசார் மாமி மதன மாமா’ என்ற பெயரில் உருவாகிய இத்திரைப்படத்தின் பாதி டைட்டிலை சென்சார் துறையினர் வெட்டிப்போட பாதி டைட்டிலுடன் ரிலீசுக்குத் தயாரான மடிசார் மாமி திரைப்படத்தை பிராமணர் சங்கத்தை சார்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்து தடை வாங்கினர்.

’மடிசார் மாமி’ என்ற பெயரில் ரிலீஸாகவிருக்கும் இந்த படம் தங்களது சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று வழக்கு தொடுத்து தடை வாங்கினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி N.கிருபாகரன் “ போக்கிரி, மங்காத்தா போன்ற சமூக விரோத உடுபொருட்களைக் கொண்ட தலைப்புகளை தங்கள் திரைப்படங்களுக்கு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும், முன்னணி நடிகர்களும் தேர்ந்தெடுப்பதே தவறு. வேறு டைட்டிலுடன் இந்ததிரைப்படத்தை பட உரிமையாளர்கள் ரிலீஸ் செய்துகொள்ளலாம் ” என்று தீர்ப்பளித்திருக்கிறாராம்.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts