Wednesday, 29 May 2013

’ஷாருக்கானுக்கு கடனாளி நான்’ - கமல்!


உலகநாயகன் என்று அழைக்கப்படும் கமலும், இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ஷாருக்கானும் ஒரே மேடையில் நின்று உணர்ச்சிப்பூர்வமாக பேசியது ‘விஜய் அவார்ட்ஸ் -2013’ நிகழ்ச்சியில் தான்.

ஷாருக்கானுக்கு செவாலியர் சிவாஜி கணேசன் விருது கமல் கையால் வழங்கப்பட்டபோது உணர்ச்சிவசத்தின் உச்சிக்கே சென்ற ஷாருக்கான், கமலுடன் ஹே ராம் படத்தில் பணியாற்றியது பற்றிய நினைவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

ஷாருக்கான் ஹேராம் திரைப்படத்தில் நடித்தது பற்றி பேசிய போது கமல் “ எனக்கும் ஷாருக்கானுக்கும் ஒரு தீராக்கடன் இருக்கிறது. ஹேராம் படத்திற்காக ஷாருக்கான் ஆர்வத்துடன் வந்து நடித்துக்கொடுத்தார். ஆனால் அவர் ஹேராமில் நடித்ததற்காக நான் சம்பளம் கொடுக்கவில்லை.

அன்றிலிருந்து இதுவரை அவரை நான் பலமுறை சந்தித்தாலும் இதுவரை அவராக வாயை திறந்து கேட்டதில்லை. ஒரு நடிகர் பணம் எதுவும் வாங்காமல் நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. நான் அதை இன்னும் மறக்கவில்லை. கூடிய விரைவில் அவரது கடனை அடைத்துவிடுவேன்” என்று ஒரு பிரபல ஆங்கில இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts