கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிக்க மெகா புராஜெக்ட் ஒன்று உருவாகவிருக்கிறது என்ற செய்தி வெளியாகி தமிழ்த்திரையுலகத்தையே கே.வி.ஆனந்த் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என அனைத்து குழுவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட, ரஜினிக்கு கால்ஷீட் இல்லாததைக் காரணம் காட்டி அதே வேகத்தில் கைவிடப்பட்டது கே.வி.ஆனந்த் திரைப்படம். ரஜினி கால்ஷீட் இல்லாததால் கேன்சலான புராஜெக்ட் இப்போது இந்தி, தமிழ் என இரு மொழிகளிலும் இரு படங்களை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் தனுஷுக்கு கிடைத்திருக்கிறது.
இதுபற்றி தனது டுவிட்டர் வலைதளத்தில் தனுஷ் “ நான் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறேன். இது உங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியான செய்தி அல்ல. எனக்கும் மகிழ்ச்சியான செய்தி தான். ஆகஸ்ட் மாதத்திலிருந்து படப்பிடிப்பு துவங்குகிறது” என்று உற்சாகத்துடன் கூறியிருக்கிறார்.

No comments:
Post a Comment