விஜய் டிவியின் ”விஜய் விருதுகள் 2013” வழங்கும் விழா நேற்று(13.05.13) நடந்தது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள, நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், தனுஷ் என திரையுலகத்தைச் சார்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஷாருக் கானுக்கு செவாலியர் சிவாஜிகணேசன் விருது கமல் கையால், சிவாஜி அவர்களின் குடும்பத்தாரின்(பிரபு, விக்ரம் பிரபு) முன்னிலையிலும், நடிகர் விஜய் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக்கொண்ட ஷாருக் கான் “ தமிழ்த்திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான கமல்ஹாசனுடனும்(ஹே ராம்), அஜித்குமாருடனும்(அஷோகா) நான் நடித்தபோது பெருமகிழ்ச்சி கொண்டேன். மேலும் நான் கொல்கத்தா அணியின் உரிமையாளராக இருந்தாலும் சென்னை அணிதான் எனது ஃபேவரெட் அணி” என்று கூற் ரசிகர்கள்ன் கரகோஷத்தைப் பெற்றுக்கொண்டார்.
பிறகு ஃபேவரெட் ஆக்டர், பெஸ்ட் எண்டர்டெயினர் ஆகிய இரு விருதுகளையும் பெற்றுக்கொண்ட விஜய் பேசிய போது “ எனக்கு இரண்டு விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் என்னை விட சிறந்த நடிகர் என் முன் உட்கார்ந்திருக்கிறார்” என்று தனுஷை சுட்டிக்காட்டினார்.
மற்றொரு நடிகரை தன்னை விட சிறந்தவர் என்று மேடையில் பேசிய விஜய்யின் குணத்தைப் பாராட்டி நடிகர் தனுஷ் டுவிட்டரில் “ விஜய் சாரின் உயர்ந்த வார்த்தைகளுக்கு என் தனிப்பட்ட வணக்கம். ஆனால் என்றைக்கும் அவர் தான் சிறந்த, பெரிய நடிகர். எனக்கு இந்தமுறை இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று ‘விஜய் விருதுகள்’, மற்றொன்று ‘விஜய்’ சாரின் விருது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.
No comments:
Post a Comment