Tuesday 25 June 2013

டி.ஆர்-உடன் நடனம்! முமைத்கான் தவிப்பு!


உலகத்திலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குனர் என்ற சாதனையுடன், தற்போது வேறு மொழி படங்களை டப்பிங் செய்து தமிழில் வெளியிட்டுக்கொண்டிருந்த இயக்குனர் ராமநாராயணன் ஆர்யா சூர்யா என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்க்கிறார்.


கடைசியாக வீராசாமி படத்தில் அதிரடியாக நடித்துவிட்டு, அரசியலில் கவனம் செலுத்திவந்த இயக்குனர், நடிகர், இசையமப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர் இத்திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி, பாடி, நடனமாடியிருக்கிறார். டி.ஆர்-உடன் ’சீனாத்தானா’ பாடலில் நடனமாடிய முமைத்கானும் நடனமாடியிருக்கிறார். 

அந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது டி.ஆர்-ன் வேகத்திற்கு முமைத்கானால் ஈடு கொடுக்கமுடியாமல் பல சமயம் நின்றுவிட்டாராம். அதன்பிறகு பல ரீடேக்குகள் எடுத்து பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. 

வயதானாலும் எனது திறமை குறைந்துவிடவில்லை’ என்று சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் டி.ஆர்.பேசியிருந்தார். டி.ஆர்.நடனமாடியிருக்கும் இந்த பாடலில் பவர்ஸ்டார் சீனிவாசன் தான் நடனமாடவிருந்தார். அவர் தற்போது டெல்லி வரை சென்றிருப்பதால் டி.ஆர் நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts