Thursday 6 June 2013

விஜய் பிறந்தநாள் விழா ரத்து! அரசியல் தலையீடுகள் காரணமா?


நடிகர் விஜய்யின் பிறந்தநாளை(ஜூன் 22) முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1 கோடி ரூபாய் அளவில் ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டுமைதானத்தில் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இந்நிகழ்ச்சியை மாபெரும் நிகழ்ச்சியாக மாற்றும் எண்ணத்துடன் தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் ரசிகர்களுக்கும் நிகழ்ச்சிக்கு வந்து சேரும்படி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை மன்றத்திலிருந்து கண்டிப்பான அழைப்பு விடுக்கப்பட்டது. விஜய்யின் 39-வது பிறந்தநாள் என்பதால் 3900 ஏழைகளுக்கு நிதியுதவி அளிக்கப்படவிருப்பதாகவும், மேலும் இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டில் தனது ரசிகர் பலத்தை எடுத்துக்காட்டும் ஒரு அரசியல் மூவ்-ஆகவும் இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.

இதற்கேற்ற வகையில் சென்னையின் பல பகுதிகளிலும் நிகழ்ச்சிக்கான பேனர்கள் அமைக்கப்பட்டு சென்னை நகரமே அமர்க்களப்பட்டுவந்தது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கனக்கான வாகனங்கள் புக் செய்யப்பட்டு ஜூன் 8-ஆம் தேதியன்று சென்னையை நோக்கி வரவிருந்ததால், விஜய் அரசியல்வாதிகளுக்கு தன் பலத்தைக் காட்டும் முயற்சியாக இருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு தான் வெற்றி என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது. 

இப்படி ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சியைக் காணவும், அரசியல்தரப்பில் விஜய்யின் அடுத்த மூவ் பாற்றி அறியவும் ஆவலாக இருந்த சமயத்தில் ‘விஜய் தலைமையில் ஜூன் 8-ஆம் தேதி நடக்கவிருந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமிருந்து தகவல் வந்துள்ளது. நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டதற்கான காரணங்கள் சொல்லப்படாவிட்டாலும், அரசியல் தலையீடுகளினால் தான் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கோடம்பாக்கத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts