Tuesday 25 June 2013

கமலுடன் கை கோர்க்கும் யுவன் ஷங்கர் ராஜா!


கார்த்தி, சிவகார்த்திகேயன், ’மிர்ச்சி’ சிவா, ஜெய், அதர்வா என  தமிழ்த்திரையுலகின் இளம் தலைமுறை நடிகர்களிலிருந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் வரை அனைவரின் திரைப்படத்திற்கும் இசையமைத்து வெற்றிபெற்றவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

துடிப்பான பாப் இசைப் பாடல்கள், ரொமாண்டிக் பாடல்கள் என பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்து திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராகவும் திகழும் யுவன் தமிழ்த் திரையுலக ஜாம்பாவான்களான  ரஜினி, கமல் ஆகியோரின் திரைப்படங்களுக்கு மட்டும் இதுவரையில் இசையமைக்கவில்லை.  

கமல் திரைப்படத்திற்கு இசையமைக்கவில்லையென்றாலும், யுவன் இசையில் கமல் பாடியிருக்கிறார். யுவன் இசையில் பாடியது குறித்து மலேசியாவில் நடந்த இசை விழாவில் பேசிய கமல் “யுவன் இசையில் நான் புதுப்பேட்டை திரைப்படத்தில்  பாடியிருக்கிறேன். யுவன் குடும்பத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் அழைப்பை நான் மறுக்கமுடியாது.

அதனால் தான் அவர்கள் குடும்பத்திலிருப்பவர்கள் அழைக்கும்போதெல்லாம்(கார்த்திக் ராஜா இசையில் உல்லாசம் திரைப்படத்தில் பாடியிருக்கிறார்) தவறாமல் பாடிக்கொடுக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் லிங்குசாமி தயாரிப்பில் கமல் இயக்கி நடிக்கும் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்திற்கு யுவன் இசையமைப்பதாக பேசப்படுகிறது.

காமெடியும், கலாட்டாவுமாக உருவாகவிருக்கும் உத்தம வில்லன் திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Blog Archive

Popular Posts